தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சம்யுக்தா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாத்தி பட குழுவினர் உட்பட திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய பாரதிராஜா சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும் போது அந்த டீச்சர் ஞாபகம் தான் வருகிறது. எனக்கு காலம் தப்பி பிறந்து விட்டனோ என்று தோன்றுகிறது. ஆனால் காதலிக்காமல் இருக்க முடியவில்லை. மேலும் நான் சம்யுக்தாவை இப்போதும் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.