சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து உள்ளே சென்ற நிலையில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மூதாட்டிக்கு கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாகராஜ் கழிப்பறையில் தவறி விழுந்ததால் கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.