மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மூடநம்பிக்கையின் உச்சமாகவும் திகழ்கிறது. அதாவது ராஜ்குமார் என்பவர் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவர் பக்தர்களுடன் பூஜையில் கலந்து கொண்ட நிலையில் திடீரென ஒரு கத்தியை எடுத்து தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.

பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடைய பாதி கழுத்து அறுபட்ட நிலையில் ஐசியூ வில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இது தொடர்பாக விசாரித்த போது அம்மனுக்கு 9 நாட்கள் விரதம் இருந்து தலைகாணிக்கை செலுத்துவதற்காக அவர் வந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அவர் பூஜையில் கலந்து கொண்ட போது திடீரென கத்தியை எடுத்து தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.