
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கி விட்டார்கள். வயதான காலத்திலோ அல்லது தங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்கோ பணத்தை சேமிப்பது அவசியமாக ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பணத்தை எந்த அளவிற்கு சேமிக்க முடியுமோ அந்த அளவிற்கு தங்களால் முடிந்த அளவு சேமித்து வருகிறார்கள். வங்கிகளை போலவே போஸ்ட் ஆபீஸிலும் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளது.
போஸ்ட் ஆபீசில் மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் தனிநபராக ஒருவர் ஒன்பது லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதே போல கூட்டுக்கணக்காக 15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் மூலமாக 5 வருடங்கள் வரை மாதாந்திர வருமானம் கிடைக்கும். ஐந்து லட்சம் ரூபாயும் 7.4 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது. அதாவது ரூ.3080 வட்டியாக வழங்கப்படுகிறது.