
இந்திய தொழிலதிபர்களில் அவ்வளவு எளிதில் மக்களால் மறந்துவிட முடியாத ஒரு இடத்தில் இருப்பவர்தான் விஜய் மல்லையா. நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான இவர் பிரபல கிங்ஃபிஷரர் நிறுவனத்தின் ஓனர். பல பிசினஸ்களில் வெற்றி அடைந்தவர். ஐபிஎல் தொடரில் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் என்று இவருடைய அடையாளம் நீண்டு கொண்டே போகும். இதற்கு இடையில் அவர் தான் வாங்கிய 9000 கோடி கடனை தன்னால் கட்ட முடியாது என்று கூறி அதன் பிறகு நாட்டை விட்டு தப்பித்து ஓடியதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இவருடைய மகன் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. தப்பியோடியவராக கருதப்படும் விஜய் மல்லையா வெளிப்படையாக மிகவும் பிரம்மாண்டமாக மகனுடைய திருமணத்தை பிரிட்டன் நாட்டில் கொண்டாடியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் வெளியான நிலையில் அதில் வேறொருவரை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அவரும் நாட்டை விட்டு தப்பி ஓடியவர்தான். ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகிக்கும் லலித் மோடி ஆவார். இரண்டு தப்பி ஓடியவர்களும் ஜாலியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்தை கண்டு நெட்டிசன்கள் அதை ஷேர் செய்து வருகிறார்கள்.