சக்கர வள்ளி கிழங்கின் பயன்கள்.

சாதாரணமாக நம்ம ஊரில் கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்குக்குள் ஒளிந்திருக்கும் இத்தனை நன்மைகள் பற்றி தெரிந்தால் அடுத்த முறை வேண்டாம் என்று சொல்லாமல் பலரும் சாப்பிடுவார்கள். ஏ, பி, சி விட்டமின்கள், ஆன்ட்டி ஆசிடுகள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த சக்கரவள்ளி கிழங்கு உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. சக்கரை வள்ளி கிழங்கில் உள்ள போலைட் அமிலம் பெண்களுக்கு கரு விரைவில் உருவாவதற்கு உறுதுணையாக செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள அல்சர் குணமாக சக்கரவள்ளி கிழங்கு காரணமாக அமைகிறது. இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும். உடலில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அழிவதாலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. சக்கரவல்லி கிழங்கை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வதால் செல்கள் பாதிக்கப்படும் வேகம் குறைந்து இளமையான தோற்றம் சாத்தியமாகிறது.

சக்கர வள்ளி கிழங்கில் நிறைந்துள்ள நார்ச்சத்து ஜீரணக் கோளாறுகளை சரி செய்து சீரான நச்சு வெளியேற்றத்தை உறுதி செய்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதால் சருமம் இயல்பான பொலிவுடன் விளங்கும் என கூறும் இயற்கை மருத்துவர்கள் நன்மைகள் பல தரும் சக்கரை வள்ளி கிழங்கை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.