
துணிவு பட குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் சென்ற 11-ம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது.
தற்போது துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும் திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அதில் அஜித் புகைப்படத்துடன் தி ரியல் வின்னர் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த போஸ்டரை சோசியல் மீடியாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது துணிவு பொங்கல் தான் என கமெண்ட் செய்தும் வருகின்றார்கள்.
The Real Winner, Happy #ThunivuPongal folks ??
Thanks to fans, audience for making #Thunivu a massive success. #Ajithkumar #HVinoth @ZeeStudios_ @BayViewProjOffl @RedGiantMovies_ @kalaignartv_off@NetflixIndia @SureshChandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial pic.twitter.com/JZRu1vuYv2
— Boney Kapoor (@BoneyKapoor) January 13, 2023