தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல் மேல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் துறைமுக வளாகம் சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய முதன்மை பொறியாளர் நவசக்தி தலைமை தாங்க துறைமுக வளாக திட்ட மேலாளர் முன்னிலை வகித்தார். இதன் பின் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட டிரைவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூ, இனிப்புகள் வழங்கப்பட்டது.