
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இத்திரைப்படத்தை அடுத்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்த நிலையில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. இந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றார்கள்.
For all the #CaptainMiller Fans , here is the Making Glimpse 🔥
Shoot in Progress 📽️💥https://t.co/XbNTBuUi0T@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @gvprakash @highonkokken @nivedhithaa_Sat @dhilipaction pic.twitter.com/uQkvg5iknK
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 22, 2023