
பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி இளம் பெண்ணின் தந்தை நெல்லை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். போலீசாரின் விசாரணையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரத்தை சேர்த்த குமார் என்பவர் இந்த வேலையை செய்ததாக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தார்கள்..