காந்திபுரம் நான்காவது வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பிரபா உத்தரவின் பேரில் உதவி நகராட்சி அதிகாரி தலைமையிலான உதவி வருவாய் அலுவலர், சுகாதார பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் 30-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் ரோடுகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட படிக்கட்டுகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. இது பற்றி மக்கள் கூறியுள்ளதாவது, ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியது வரவேற்கத்தக்கது. இது போலவே போக்குவரத்துக்கு இடையூறாக காந்திபுரம் பகுதியில் இருக்கும் வீதிகளில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றார்கள். இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் அவர்கள் தெரிவித்தார்கள்.