ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகின்றன.

ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அவரின் உயரம் 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் எடுத்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

அவர்களுக்கு மாத ஊதியமாக மொத்தம் 15 ஆயிரத்து 235 ரூபாய் வழங்கப்படும். இந்த தேர்வானது எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை திறன், மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து நாட்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டு பின் பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மேலும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்காக விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இரண்டு வருடங்கள் படித்திருக்க வேண்டும், லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15 ஆயிரத்து 435 ரூபாய் வழங்கப்படும். இதில் விண்ணப்பிப்பவர்கள் 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.