
சூரியனின் மேற்பகுதியில் தீஜுவாலைகள் சுழண்டு மேல் எழும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேஷன் ஸ்பேஸ் என்ற நாசாவின் விண்கலம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் வானில் சுற்றியபடியே சூரியனை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. தற்போது இந்த காட்சிகள் சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பாதிப்பு எனக் கூறி தவறான தகவலுடன் பரப்பப்பட்டு வருகிறது.