மலேசியா கோலாலம்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் 31 வயதான இந்திய பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தரைப்பகுதி உள்வாங்கியது. இதில் அவர் குழிக்குள் விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீ மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல்களை தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த 15 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதோடு மலேசியாவின் சிறப்பு தந்திரோபாயா நடவடிக்கை மற்றும் மீட்புக் குழு மற்றும் K9 குழு ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து மீட்பு குழு தலைவர் கூறியதாவது, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதோடு, அக்கம் பக்கத்தினரிடம் வாக்குமூலம் பெற்று என்ன நடந்தது என்பதை குறித்து துல்லியமாக படத்தை வரைந்து மீட்பு பணியை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.