வேலூர் மாவட்டம் பரமத்தி போத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). இவருக்கு சொந்தமாக உள்ள குடிசை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனைப் பார்த்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைப்பதற்கு முன்னதாகவே வீட்டிலிருந்த ஆவணங்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி சாம்பல் ஆனது.

இதுகுறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.