மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள கலஸ்கேடில் மாட்டுப்பண்ணை ஒன்று இருக்கிறது. அதற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பு ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அந்த நாகப்பாம்பை சில மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக பிடித்தனர். அதன் பிறகு அந்தப் பாம்பு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.