
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியை சாக்லேட்டுகள் நிறைய வாங்கித் தருவதாக ஏமாற்றி தனியே அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அச்சிறுமிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் பயந்த சிறுமி செய்வதறியாது கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாஸ்கரிடமிருந்து அச்சிறுமியை காப்பாற்றினர். மேலும் இது குறித்து பல்லாவரம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பாஸ்கரிடம் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.