உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த வேனை முந்தி செல்ல முயன்ற போது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 16 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அதோடு நிவாரண வேலைகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில் பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். அதோடு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.