உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கார் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி, திடீரென்று அங்கிருந்து வந்த மகேந்திரா தார் எஸ்யூவி என்ற கார் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது மோதியது.

இதனை அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த சிலர் சம்பவத்தை வந்து பார்க்க முயன்றனர். அப்போது அந்த கார் மீண்டும் ஒரு பெண்ணின் மீது மோதியது, அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் கோர சம்பவத்திலிருந்து உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்தது. இந்த காரை ஓடியது ஒரு சிறுவன் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, இதுவரை சம்பவம் தொடர்பாக எந்தவித புகாரும் வரவில்லை என்றும், புகார் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.