உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராய்பரேலி நகரில் வியக்க வைக்கும் வகையில் நள்ளிரவில் இடிந்திரா நகர் காலனியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்ததால், தற்போது போலீசார் அந்தக் காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காரின் உரிமையாளர் மறுநாள் காலை வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாலும், மர்ம நபர்கள் வெறும் சில நிமிடங்களில் காரின் பூட்டை உடைத்து தப்பிச் சென்றதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். போலீசார் தெரிவித்ததாவது, “இந்த திருடர்கள் மிகவும் நுணுக்கமாக செயல்படும் தொழில்முறை கும்பல் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளன” என கூறினர். இதனால் அந்தப்பகுதி மக்களுக்கு பாதுக்காப்பு இல்லாத காரணத்தால், அதிக சிசிடிவி கேமராக்கள் மற்றும் இரவு நேரத்தில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.