தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 10-ம் தேதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) போராட்டம் நடத்தியது. இவர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதனால் அன்றைய தினம் 30.5% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தற்போது பள்ளி கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி கடந்த 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளமானது பிடித்தம் செய்யப்பட உள்ளது.