உத்தரப் பிரதேசத்தின் பாதோகி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் மனித நேயத்தை உலுக்கியுள்ளது. 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற வீர்நாத் பாண்டே என்பவர் ஜாமீனில் வெளியே வந்து, அதே சிறுமியை மீண்டும் கடத்தி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே மாதம் சிறுமியை கடத்திய வீர்நாத் பாண்டே, கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் இயற்கை உபாதையை கழிக்க வந்த அதே சிறுமியை மீண்டும் கடத்தி, ஒரு மாதத்திற்கும் மேலாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2ம் தேதி ரயில் நிலையம் அருகே சிறுமியை விட்டுச் சென்ற நிலையில், தற்போது வீர்நாத் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், சட்டம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் உள்ளது. ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, மீண்டும் அதே குற்றத்தைச் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.