
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊர்களில் இருந்தும் தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சென்னையிலிருந்து தீபாவளியை கொண்டாட தீபக் அழகப்பன்- தெய்வானை தம்பதியினர் தங்களது குழந்தையோடு தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் கார் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் பக்கவாட்டில் உள்ள சுவற்றின் மீது வேகமாக மோதியது.
இந்த கொடூரமான விபத்தில் காரில் இருந்த தீபக், தெய்வானை படுகாயத்துடன் உயிர்த்தப்பினர். ஆனால் அவர்களது 9 மாத குழந்தை கார் வேகமாக மோதியதால் பரிதாபமாக இறந்தது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீபக் மற்றும் தெய்வானையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.