
மும்பையில் கண்டவளி அருகே மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் பணி நடந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய நடிகையான ஊர்மிளா கொத்தாரே தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை ஊர்மிளா லேசான காயத்துடன் உயிர் தப்பினார், அவரது டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கார் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. நடிகை ஏர்பக் இருந்ததால் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.