திருச்சியில் ஸ்ரீரங்கம் என்ற பகுதியில் உள்ளது. இங்கு அன்பு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியும் அவர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள ஜிம்முக்கு சென்று விட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பியுள்ளார். அப்போது சில மர்மநபர்கள் அவரை ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் அவர் கழுத்து, தலை, கைகளில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். பின்னர் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.