மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கபாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் சிகர்வார் (42). இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு சூர்யாஷ்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராகேஷ் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய போது அடிக்கடி தனது மனைவி அனுராதாவை பெல்டால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அவரது கொடூரமான செயலை சமூக ஆர்வலர்கள் பலரும் நிறுத்துவதற்காக முயற்சி செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கம்போல பணி முடிந்து வீடு திரும்பிய ராகேஷ் தனது தாயார் மால்தி சிகர்வார் (70) உடன் சேர்ந்து தனது மனைவி அனுராதாவை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளி கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த மிக முக்கியமான சாட்சி அனுராதாவின் மகன் சூரியாஷ். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் சூர்யாஷ் நீதிமன்றத்தில் நேரடியாக சாட்சி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, தனது அப்பா மற்றும் பாட்டி அம்மாவை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட்டார்கள். அம்மா உதவி கேட்டு கதறினார் என கூறியுள்ளார். மேலும் அந்த சாட்சி மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி விஷால் அகண்ட், ராகேஷ் மற்றும் அவரது தாயாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூபாய் 1000 அபராதமும் விதித்தார். தாய்க்கு நீதி பெற்று தருவதற்காக சிறுவன் செய்த துணிச்சலான செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.