
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர். இவர்கள் கார் திருவண்ணாமலை-போளூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அரசு பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது.
திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் முன்னாள் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது மோதி பெரும் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த வளர்மதி மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஞானசேகரன், ஜெயந்தி, ரிதன்யா ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.