
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு குல்லா அணிந்து கொண்டும் ஆளில்லாத வீடுகளுக்கு சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கொள்ளை சம்பவம் தொடர்ந்து அதிகரிப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் சிவகங்கை மாவட்டம் சக்கந்தி பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.