
உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து குரங்குகள் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்பா பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சாக்லேட் தருவதாகக் கூறி ஒருவர் அவளைக் கவர்ந்து அழைத்து சென்றுள்ளார். சிறுமி எதிர்பாராத வகையில் ஆபத்தில் சிக்கிய நிலையில், அவளது அலறல் மொத்த சூழலையே மாற்றியது.
அந்த சிறுமியின் சத்தத்தை கேட்ட குரங்குகள் திடீரென ஓடிவந்து, குற்றவாளியை துரத்தி தாக்கியன. குரங்குகள் தன் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டு, அந்த நபர் அவசரமாக தப்ப முயன்றுள்ளார், இதனால் சிறுமி தப்பிச் சென்று தனது வீட்டாரிடம் சேர முடிந்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மிருகங்கள் நமக்குள் இருக்கும் கருணையை வெளிப்படுத்துகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுமியின் புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.