
இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரன்தம் போர் தேசிய பூங்கா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று ஒரு வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த நாய் சிறுத்தை வருவதை கண்டவுடன் குரைக்க ஆரம்பித்தது. இதனால் பயந்து போன சிறுத்தை அங்கிருந்து தப்பித்து ஓடியது. இந்த சம்பவம் வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இணையத்தில் வீடியோவாக வைரலானது. இதைத்தொடர்ந்து பலரும் நாய்க்கு பாராட்டு தெரிவித்ததோடு, நகைச்சுவையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
அதில் ஒருவர் “இப்போ அந்த நாய்க்கு தெருவில் ஹீரோ டைட்டில் கொடுக்கணும்” என்று பதிவிட்டுள்ள நிலையில், மற்றொருவர் “dogesh bhai” இப்போ தன்னோட நண்பர்கள் கூட ஓவரா பில்டப் பண்ணுவாரு என்று பதிவிட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை எதிர்த்து நின்ற நாயின் தைரியம் இணையதளவாசிகளால் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.