
Bryan Johnson என்பவர் உருவாக்கிய Blueprint எனும் வாழ்க்கை முறை திட்டம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Max G என அறியப்படும் ஒருவர், இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தை தொடர்ந்து பின்பற்றியதன் மூலம், தனது உயிரியல் வயது 28ல் இருந்து 18 ஆக குறைந்ததாகவும், தனது உடலின் 90% உயிரியல் குறியீடுகள் சிறந்த நிலைக்குள் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது பயணத்தை X தளத்தில் பகிர்ந்த Max, 2023ல் எப்போதும் சோர்வாகவும், அதிக கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்துடன் இருந்ததாகவும், 2024ல் தனது ஆரோக்கியத்தை முழுமையாக மாற்றி, 2025ல் உயிரியல் ரீதியாக 10 ஆண்டுகள் இளமையாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவ, பலரும் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டாலும், சிலர் அதன் செயல்திறன் மற்றும் எல்லாருக்கும் இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்விகளும் எழுப்பியுள்ளனர்.
ஒரு பயனர், “இதற்கு எதிர்மறையான விளைவுகள் ஏதும் உள்ளதா?” எனக் கேட்டதற்கு, Max, இந்த திட்டம் தனது உடல்நலத்துக்கு பெரும் பலனை கொடுத்தாலும், அதிக செலவும் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார். இதன் செலவு குறித்தும், பொதுமக்களுக்கு இது எளிதாக கிடைக்குமா என்ற கருத்து இணையத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது.
Blueprint திட்டம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம், சரும பராமரிப்பு என அனைத்தையும் அடிப்படையாக கொண்ட “ஆதாரமுள்ள வாழ்க்கை முறையாக” விளக்கப்பட்டுள்ளது. Bryan Johnson-ஐ “உலகின் மிக ஆரோக்கியமான மனிதர்” என அந்த தளம் குறிப்பிடுகிறது. ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்த திட்டத்தை கடைபிடித்து வருகிறார்.
இந்த திட்டம் உடல் உறுதி, மன கவனம், இதய ஆரோக்கியம் மற்றும் மனநிலை மேம்பாடு போன்றவற்றில் உதவக்கூடும் என கூறப்பட்டாலும், இதன் நீடித்த நடைமுறை, செலவு, மற்றும் இயல்பான வாழ்வின் மீது தாக்கம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே வருகின்றன.
almost 2 years on @bryan_johnson‘s Blueprint:
in 2023: always tired, carb-loading, night owl habits.
In 2024: turned things around, focused on health & longevity.
2025: 10 YEARS YOUNGER biologically (18 vs 28) with 90% of all biomarkers in optimal ranges pic.twitter.com/fX5QrLxQKy
— MAX G (@gm_maxg) March 18, 2025