
உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள பகுதியில் ஸ்டேஷன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் போன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் போடுவதற்காக அலோக் என்பவர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை குற்றம் சாடியுள்ளார்.
कर्मचारी की लाठी,कस्टमर का तेल
यूपी फिरोजाबाद स्टेशन रोड पेट्रोल पंप कर्मचारियों की दंबगई. तेल कम की शिकायत- विरोध पर लाठी से पीटते अन्य तमाशबीन देखते रहे!#jagoGrahakJago pic.twitter.com/BpMGMG5VcH— Tushar Rai (@tusharcrai) April 14, 2025
மேலும் அவர்களிடம் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் கட்டை மற்றும் கம்புகளால் அலோக்கை தாக்கியுள்ளனர். இதனை பெட்ரோல் போட வந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.