
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியபோது, தவறி விழுந்த பயணி நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளார். ரெயில் ராமநாதபுரம் நிலையம் வந்தவுடன் அவர் இறங்கி, பின்னர் மீண்டும் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறிய அவர், ரெயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இதனை ரெயில்வே காவலர்கள் கவனித்ததுடன், உடனடியாக ரெயிலை நிறுத்தி அந்த பயணியை லாவகமாக மீட்டனர். பயணியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியதுடன், ரெயில்வே காவலர்களின் நேர்மையான செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றது.