
தமிழகத்தில் விவசாயத்தில் வடநாட்டு காரர்கள் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, வடநாட்டுக்காரர்கள் வேலை செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் கிட்டத்தட்ட 2 வருஷமா தமிழ்நாடு முழுவதும் நிறைய கிராமங்களுக்கு போயிருக்கிறேன். சாதாரண ஏழைப் பெண்கள் நிறைய இடத்துல என்கிட்ட கேள்வி கேட்கிறது என்னன்னா ..?
ஐயா 100 நாள் வேலை திட்டம் சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப வரவர குறைந்து கொண்டு இருக்கு. வருசத்துக்கு 50 நாள், 40 நாள் கூட எங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது. சில கிராமங்களில் 20 நாள் கூட கிடைக்க மாட்டேங்குது. குறிப்பா ஏழை கிராம பெண்கள் என்னிடம் நிறைய இடத்தில் கோரிக்கை வச்சாங்க. இது விஷயமா தமிழ்நாட்டில் யாரும் பேசினது கிடையாது.
முதல் முறையா மறுமலர்ச்சி திராவிட கழகம் இந்த பிரச்சினை கையில் எடுத்துருக்கு.100 நாள் வேலை திட்டம் அது ஒரு பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கின்றது. அதை நான் புள்ளி விவரங்களோடு சொல்லனும்னா…. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 2,70,000 கோடி ஒன்றிய ஒதுக்கணும். ஆனால் சென்ற வருடம் வெறும் 72,000 கோடி தான் ஒதுக்குனாங்க.
இந்த வருஷம் நடப்பு வருசம் 2023-2024 போன வருஷத்தோட கிட்டத்தட்ட 20 விழுக்காடு குறைவாக வெறும் 60,000 கோடி ஒதுக்கி இருக்காங்க. சில மாவட்டங்களில் வறட்சி… விவசாயமே கிடையாது, வருஷத்துல மூணு மாசம், நாலு மாசம் தான் விவசாயம் நடக்கும். அந்த மாதிரி இடங்கள்ல… அந்த மாதிரி காலகட்டங்களில்… இந்த அடித்தட்டு ஏழை மக்களுக்கு…. ஒரே ஒரு வாய்ப்பு இந்த நூறு நாள் வேலை திட்டம்தான்.
கடந்த மூன்று, நான்கு வருடங்களாக படிப்படியாக குறைச்சிட்டு வராங்க… இப்படியே போச்சுன்னா… அடுத்து இனி நாலு, அஞ்சு வருஷத்துல 100 நாள் வேலைத்திட்டமே இருக்கவே இருக்காது. நீங்க சொல்றீங்க… வடநாட்டுக்காரங்க வந்து வேலை செய்றாங்க, அது தவிர்க்கப்படனும்… நமது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கணும்… ஆனால் இந்த திட்டமே இப்படியே போச்சுன்னா இனி இந்த திட்டமே இருக்காது என தெரிவித்தார்.