இமாச்சல பிரதேசத்தில் தாமி கிராமத்தில் காளி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது பக்தர்கள் 2 பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கிக் கொள்கின்றனர். இந்த விழா காளியை குளிர்விப்பதற்காக நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.

ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்வதால் பக்தர்களுக்கு இரத்த காயம் ஏற்படுகிறது. இது தான் காளிக்கு காணிக்கையாக கருதப்படுகிறது. இந்த விழா பல நூற்று ஆண்டுகளாக பின்பற்றப்படுவதாக இந்த கிராம மக்கள் கூறுகின்றனர். நரபலிக்கு பதிலாக இந்த வினோத திருவிழா கொண்டாடப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.