
மனதை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு வயதான தம்பதியினரை, அவர்களது மகன் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு செல்வதைக் காணலாம். அந்த தம்பதிகள் கண்கலங்கி கெஞ்சிய போதும், அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் அவர்களை விட்டு விட்டு சென்றுவிடுகிறார்.
வீடியோவில் தாயின் துயரமான கதறலும், தந்தையின் அமைதியான ஏமாற்றமும் அனைவரின் உள்ளங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 75,000-க்கும் அதிகமான லைக்குகள், ஆயிரக்கணக்கான கருத்துகள் மற்றும் பகிர்வுகள் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
“அமாணுஷம்”, “வெட்கக்கேடான செயல்”, “இதைக் காணவே முடியவில்லை” என பலரும் விமர்சனம் செய்துள்ளனர். மூத்த குடிமக்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவும், குடும்பங்களில் உணர்ச்சி விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பதும் யார் அந்த மகன், யார் அந்த தம்பதியினர் என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மூத்த குடிமக்கள் நலனுக்காக செயல்படும் பல அமைப்புகள், இச்சம்பவம் போன்றவற்றை தடுக்க அரசாங்கமும், பொதுமக்களும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.