
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரம் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர், அதிவேகமாக வந்த காரொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தக் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
வீடியோவில், ஆசிரியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை சாலையோரம் இறக்கி விட்டு நின்றிருக்கும் நிலையில், பின் பக்கம் அதிவேகமாக வந்த கார் நேருக்கு நேர் மோதி உள்ளது. காரின் வேகம் காரணமாக ஆசிரியர் பல அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டார். அவருடன் இருந்த பெண் உடனடியாக விரைந்து ஓடி சென்று அவரை பார்த்தபோது, கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் மட்டும் துயரத்தில் தவித்த ஆசிரியருக்கு உதவ முனைந்தார்.
#JUSTIN சேலம் ; பூலாம்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த ஆசிரியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு
விபத்தின் சிசிடிவி காட்சி#Salem #Poolampatti #Accident #CCTV #News pic.twitter.com/A8v04xbjBd— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) March 29, 2025