உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இருசக்கர வாகனக் கடத்தல் சம்பவம் ஒன்று சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

ஸ்வரூப் ஸ்கொயர் பகுதியில் உள்ள ஒரு கடைக்குப் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளை, மாஸ்க் அணிந்து வந்த ஒரு நபர், கூர்மையான இரும்பு பொருளை பயன்படுத்தி பூட்டை உடைத்து, வெறும் 15 விநாடிகளில் திருடிச் சென்றார்.

 

இந்த சம்பவம் ஒரு கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. 26 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மோட்டார் சைக்கிளின் பூட்டை கூர்மையான கருவி மூலம் திறந்து விட்டு, சற்றும் தயங்காமல் திருடன் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது காணப்படுகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்போது வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.