
நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை தேங்காயில் இருக்கும் நல்ல கொழுப்புகள் நீக்கி விடுகின்றது என கூறப்படுகின்றது. இதனை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் கொழுப்பு சத்து சீராவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது. முகப்பருக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளைத் தீர இது உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது என சொல்லப்படுகின்றது.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது. அதேபோல் இரவில் உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேங்காய் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். தேங்காயில் செலினியம் மற்றும் புரதச்சத்து அதிக அளவு நிரம்பியுள்ளது. இவை முடி உதிர்தல் மற்றும் முடியின் அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்பட விடாமல் தடுக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.