
உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம் பேசி வந்த நிலையில் அந்தப் பெண்ணின் தாய்க்கும், இளைஞனுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வேறொரு இடத்தில் அந்த இளம் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் மே 9 ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் தாய் ஏற்கனவே நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் திடீரென வீட்டை விட்டு ஓடியதாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தற்போது பெங்களூருவில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓடிப்போனதாக கூறப்பட்ட பெண்ணின் கணவர் “அவர்கள் இருவரும் ஓடிப்போகவில்லை, என் மனைவி என் வீட்டில் இருக்கிறார்” என்று கூறினார். அதோடு அந்த இளைஞனும் தான் ஓடிப் போகவில்லை என்று கூறினார். இதனை கேட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது