
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பேருந்து பெரியபாளையம் அருகே வடமதுரை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின் இருக்கையில் இருந்த கவிதா முன் செல்ல முயன்றார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக தவறி பேருந்தின் பின் படிக்கட்டுகள் வழியே வெளியே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த கவிதா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெரியபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.