புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் ஆசை காட்டி 100க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பறித்த கடலூர் பெண் காயத்ரியை (35) கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில், காயத்ரி தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷை வாட்ஸ்அப்பில் ஆசை காட்டி மோசடி செய்தது தெரியவந்தது. அவர் பணம் அனுப்பிய பிறகு, குறிப்பிட்ட இடத்தில் 5 மணி நேரம் காத்திருந்தும், யாரும் வராததால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

காயத்ரி, சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை டவுன்லோடு செய்து, அவற்றைப் பயன்படுத்தி ஆண்களை மயக்கி, அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களை மோசடி செய்ததாகவும், அதன் மூலம் 6 மாதங்களில் மட்டும் ரூ.4 லட்சம் பணம் சேகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் காயத்ரியை கைது செய்த போலீசார், விசாரணை முடிந்தபின் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மத்திய சிறையில் அடைத்துள்ளார்.