
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர்பகுதியில் இளம் பெண் டாக்டர் ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் டாக்டரும், அந்தப் பகுதியில் வசித்து வரும் உஸ்மான் என்ற நபரும் பேஸ்புக் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவருமே பேஸ்புக்கில் பழகி வந்துள்ளனர். உஸ்மான் டாக்டரை காதலிப்பதாக கூறியும், அவரை திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு மறுத்த பெண் டாக்டர் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
மேலும், அவரது பேஸ்புக் அக்கவுண்ட் பிளாக் செய்தும் உள்ளார். இதனால் கோபமடைந்த உஸ்மான், டாக்டருக்கு வேறு ஒரு பேஸ்புக் கணக்கு மூலம் தொடர்ந்து ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியும், டாக்டரின் முகத்தை தவறான புகைப்படத்துடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியும் உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த டாக்டர் இதுகுறித்து அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உஸ்மானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.