
அருண் ஐஸ்கிரீம் தமிழகத்தில் வெற்றி பெற்ற கதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் தொழில் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் தன்னிடம் பணம் இல்லை, உதவுவதற்கு சரியான துணை இல்லை என ஏதாவதொரு காரணத்தை முன் வைத்து,
தொழிலில் ஈடுபடாமல் இருப்பார்கள். 1971 இல் தெருக்களில் 10 பைசாவிற்கு ஐஸ் விற்றுக் கொண்டிருந்த சந்திரமோகன் என்ற நபர், பெரிய தொழில் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டு தனது குடும்ப சொத்தை விற்று ரூபாய் 13,000 திரட்டி, ஜி கே & கோ என்ற நிறுவனத்தை உருவாக்கி இன்று தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருக்கும் அருண் ஐஸ் கிரீம் என்ற உற்பத்தி பொருளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
அது மாபெரும் வெற்றி அடைய, ஐஸ்கிரீம் செய்ய தேவையான மூலப்பொருளே பால் தான். அந்தப் பால் மூலம் பிறப் பொருட்களை தயார் செய்து, மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வர, ஆரோக்கிய என்ற பெயரில் பால் பாக்கெட்டுகளை விற்கத் தொடங்கினார்.
அதுவும் பெரிய அளவிலான வெற்றியை அவருக்கு தேடித் தரவே, தயிர், மோர், வெண்ணைய், நெய் என பால் சார்ந்த அத்தனை பொருட்களையும் தயாரித்து மார்க்கெட்டில் விற்கத் தொடங்கினார். அன்று 10 பைசாவில் தொழில் செய்து கொண்டிருந்த அவர், ரிஸ்க் எடுத்து தொழில் தொடங்க அந்நிறுவனம் தற்போது வருடத்திற்கு ரூபாய் 5000 கோடி லாபம் ஈட்டி தருகிறது. தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கனவு காணும் பலருக்கும் இவரது கதை சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.