விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில், 17 வயது கல்லூரி மாணவி கவிநிஷா பரிதாபமாக உயிரிழந்தார். சிபிராஜ் என்ற நண்பருடன் பைக்கில் சென்ற போது, அவர்களின் பைக் வேக கட்டுப்பாட்டுக்காக சாலையில் வைத்திருந்த இரும்பு பேரிக்காடு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

கவிநிஷா, விழுப்புரம் அரசு கல்லூரியில் வரலாறு பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிபிராஜும் அதே கல்லூரி மாணவன் ஆவார், நண்பரின் புதிய பைக்கை சோதனை ஓட்டமாக எடுத்துச் சென்றிருந்தார். மகாராஜபுரம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில், இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

விபத்துக்குப் பிறகு, அங்கிருந்தவர்கள் இருவரையும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே கவிநிஷா உயிரிழந்தார். சிபிராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.