கொடைக்கானலில் பைன் மர சோலை சுற்றுலாப் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.