
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் விபத்து நடந்துள்ளது. குமரேசன் மற்றும் யமுனா தம்பதிகளின் 12 வயது மகன் யோகேஷ் பாண்டியன், தனது தாயுடன் பள்ளிக்கு செல்வதற்காக டூ-வீலரில் பயணம் செய்த போது விபத்தில் பலியானார். யமுனா டூ-வீலரை ஓட்டி, பள்ளி செல்ல நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
விபத்து பழனி-உடுமலை சாலையில் நடந்தது. யமுனா கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, எதிரே வந்த சங்கர்குரு என்பவரின் டூ-வீலர் மோதி, யோகேஷ் பாண்டியன் கன்டெய்னர் லாரியின் பின் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் மரணத்தை தன் கண் முன் கண்ட யமுனா சோகத்தில் கதறி துடித்தார்.
இந்த விபத்தில் யமுனாவும் பலத்த காயம் அடைந்தார், அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்னர். சென்ற இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.