கேரளாவை சேர்ந்த திலீப் கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் நிலையில் தற்போது விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். திருவனந்தபுரம் போத்தங்காடு அருகே உள்ள நந்தூர்கோணம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அமல், சச்சு ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.