
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் தனது பெயரிலும், அவரது மனைவி மற்றும் மகன் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக மூன்று கோடி சொத்து சேர்த்ததாக அரசு தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் எம் ஆர் கே பழனி செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.