
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் சிவா மனசுல சக்தி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜீவா தற்போது பிளாக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கே ஜி பாலசுப்பிரமணி இயக்கியுள்ள நிலையில் பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.
ஹாரர் மற்றும் திரில்லர் படமாக பிளாக் அமைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு சாம்சி.எஸ் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.